மோடியை நோக்கி பறக்கும் அஞ்சல் அட்டைகள்!

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் நிகழ்ச்சி காரைக்கால் நகரில் பாஜக சார்பில் நடைபெற்றது.
சமீபத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் ஒரு தரப்பு விவசாயிகளிடம் பெரும் கொந்தளிப்பையும், மற்றொரு தரப்பு விவசாயிகளிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு பயனுள்ள விதத்தில் இருப்பதாகவும், அதனால் இந்த சட்டங்களை கொண்டு வந்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும் காரைக்காலில் உள்ள பாஜக விவசாய பிரிவு அணியினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்து அஞ்சல் அட்டை அனுப்பினர்.
காரைக்கால் தலைமை தபால் நிலையம் முன்பு கூடியவர்கள், பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கங்களை எழுப்பியதோடு, அஞ்சல் அட்டைகளை அவரது முகவரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அருள் முருகன் மற்றும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.