1. Home
  2. தமிழ்நாடு

தொடங்கியது தபால் ஓட்டுப்பதிவு..!

Q

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்.,5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் உள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க, மற்றும் த.வெ.க., உள்ளிட்ட கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளன.

ஓட்டு எண்ணும் மையத்தில் கம்பி, தகரங்களால் ஆன தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஓட்டு பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஓட்டுக்களை தபாலில் செலுத்தலாம். இதன்படி தொகுதியில், 209 வயதானவர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என, 256 பேர் தபால் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு '12-டி' படிவம் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்றனர். இந்நிலையில், இன்று (ஜன.,23) தபால் ஓட்டுப்பதிவு துவங்கியது. தகுதியானோர் வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இன்று முதல் ஜன., 27ம் தேதி வரை ஓட்டுப்பதிவு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளனர். தபால் ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Trending News

Latest News

You May Like