யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட வேண்டும்..! தொண்டர்களுக்கு இ.பி.எஸ் அறிவுரை!
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், அவர் பேசியதாவது:
இப்போது 40 சதவீத ஓட்டுகள் இளைஞர்கள் கையில் உள்ளன. அதை அ.தி.மு.க., பெற வேண்டும். இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் ஓட்டு பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்கு 15 மாத காலம் தான் உள்ளது, நீங்கள் எந்தளவிற்கு பணி செய்கிறீர்களோ அந்தளவிற்கு வலிமை கிடைக்கும். இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, பேஸ்புக், எக்ஸ் தளம் மட்டுமின்றி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட வேண்டும். 10 சதவீத ஓட்டுகளை இழந்துவிட்டோம். அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.