சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடி விற்பனை..!
நாடு முழுவதும் நாளை 79வது சுதந்திரதின விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை, திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து 'இல்லந்தோறும் மூவர்ணம்' எனும் பிரச்சாரத்தை, மத்திய அரசு தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக,13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடியேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.ஒரு தேசியக் கொடியின் விலை ரூ.25 ஆகும். அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.epos toffice.gov.in என்ற வலைதளத்திலும் ஆர்டர் செய்து ஆன்-லைனிலும் வாங்கலாம்.
.png)