போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம்..! ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால்...
FD திட்டங்களில் வட்டி விகிதங்கள் அடிக்கடி மாற்றப்பட்டும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும் வாடிக்கையாளர்களின் அசல் தொகையுடன் வட்டி சேர்க்கப்படும். அதே நேரம் தபால் நிலையங்களில் FD திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டும். அஞ்சலக எஃப்.டி-களில் ரூ. 2 லட்சத்தை ஒருவர் முதலீடு செய்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும் வருமானம் கிடைக்கும்.
தற்போது FDயில் 2 லட்ச ரூபாய் முதலீடு செய்யும் போது ஒரு வருடத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழ்ங்கப்படுகிறது.
மூன்று வருடங்களுக்கு 7.1, ஐந்தாண்டுகளுக்கு 7.5 சதவீதமாகவும் வட்டி விகிதம் உள்ளது. அஞ்சலக எஃப்டியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும் போது ஓராண்டுக்கு வட்டியாக ரூ.7,080 வட்டி கிடைக்கும். இதன் மூலமாக ஓராண்டுக்கு பிறகு முதிர்வு தொகையாக ரூ. 1,07,080 பெறலாம். இரண்டு வருட FDக்கு ரூ.14,888 வட்டி கிடைக்கும்.
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 23,507 மற்றும் ஐந்து வருடங்களுக்கு ரூ. 44,994 வட்டியும் வழங்கப்படும். அதே நேரம் ரூ.1.5 லட்சம் FD யாக இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 67,492 வட்டியாக கிடைக்கும். இதன் மூலமாக முதிர்வு தொகையாக ரூ. 2,17,492 பெறலாம். ரூ. 2 லட்சம் நிலையான வைப்புக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 89,989 வட்டி கிடைக்கும். மொத்தமாக ரூ. 2,89,989 முதிர்வு தொகையாக பெறலாம். தபால் நிலையங்களில் FD கணக்கு துவங்க குறைந்தபட்சமாக ரூ.1000 வைப்புத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.