1. Home
  2. தமிழ்நாடு

போஸ்ட் ஆபீஸ் அசத்தல் திட்டம் : தினமும் வெறும் 50 ரூபாய் கட்டினால், ரூ.35 லட்சம் அள்ளலாம்..!

1

யோஜனா அஞ்சல் அலுவலகத்தின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிராம் சுரக்ஷா செயல்படுகிறது. இத்திட்டம் கிராமப்புற மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு நாளும் ரூ.50 முதலீடு செய்தால் போதும். முதிர்ச்சியின் போது ரூ.35,00,000 தொகையைப் பெறலாம்.

கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000, அதிகபட்ச வரம்பாக ரூ.10 லட்சம் உள்ளது. இத்திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் பிரீமியத்தை டெபாசிட் செய்யலாம்.

பாலிசிதாரர் ஒவ்வொரு மாதமும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் தினசரி சுமார் 50 ரூபாய் வீதம் மாதம் ரூ.1,515 செலுத்துவதன் மூலம் Rs. 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம். இந்த பாலிசி மூலம் 55 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் முதிர்ச்சியடைந்த பிறகு ரூ.31,60,000 திரும்ப பெறலாம். 58 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.33,40,000 திரும்ப பெறலாம். 60 ஆண்டு காலம் முதலீடு செய்தால் ரூ.34.60 லட்சம் திரும்ப பெறலாம்.

கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உள்ளது. பாலிசி தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு போனஸும் கிடைக்கும்.

ரூ.35 லட்சம், 80 வயதை நிறைவு செய்யும்போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். எனினும் பலர், இதற்கு முன்பே தொகையை கோருவதால், விதிகளின்படி 55 வருட முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரமும், 58 வருட முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரமும், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரமும் லாபம் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like