1. Home
  2. தமிழ்நாடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேதி அறிவிப்பு..!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு.. மாற்று தேதி அறிவிப்பு..!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாற்று தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 15,000 என்று இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 16 ஆயிரத்தை தாண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வுத்துறை வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் இந்த தேர்வு பிப்ரவரி 12-ம் தேதி முதல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தேர்வுக்காக விநியோகம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டை வைத்து தேர்வு எழுதலாம் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like