1. Home
  2. தமிழ்நாடு

வட்டி கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டல்... பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.. ஒருவர் கைது !



கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்த சுகுணா(53) என்பவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 15 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

வாங்கிய கடனுக்கு 4 மாதங்கள் மட்டுமே சுகுணா வட்டியைச் செலுத்தினார். பின்னர் அவரது மகன் கோபிநாத்(31) கடனுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டி மட்டும் செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக கோபிநாத் கடனுக்கு வட்டியை செலுத்த இயலவில்லை. அந்த நிதி நிறுவனத்தை பாஜக மாவட்ட தலைவர் நடத்தி வந்துள்ளார். 

வட்டி கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டல்... பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.. ஒருவர் கைது !

இதனால் கடந்த 31ஆம் தேதி நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார்(39) மற்றும் ஊழியர் பிரகாஷ் ஆகிய இருவரும், கோபிநாத் வீட்டுக்குச் சென்று அவரை ஆபாசமாக திட்டி, மிரட்டியுள்ளனர்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த கோபிநாத், செப்.1ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் சென்று அவர்கள் மீது புகார் கொடுத்தார். மேலும் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் கரூர் நகர காவல் நிலையத்தில் கோபிநாத் நேற்று முன்தினம் அளித்த புகார் அளித்தார்.

வட்டி கேட்டு ஆபாசமாக திட்டி மிரட்டல்... பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு.. ஒருவர் கைது !

அதன்பேரில் நிதி நிறுவன உரிமையாளரும், கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவருமான எம்.கே.கணேசமூர்த்தி, நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார், ஊழியர் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

செந்தில்குமாரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர். 

newstm.in 

Trending News

Latest News

You May Like