லீக்கான பிரபல நடிகையின் ஆபாச வீடியோ! கண்ணீர் மல்க புகார்!

மலையாளத்தில் புகழ் பெற்ற சோனா ஆபிரகாம் என்ற நடிகையின் ஆபாச வீடியோ காட்சி இணையத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்முறைக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, "பார் சேல்" என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில், ஒரு காட்சியில் அவர் பலாத்காரம் செய்யப்படுவது போன்று காட்சியமைக்கப்பட்டது. அதில் நீக்கப்பட்ட ஆபாச காட்சிகள் எல்லாம் தற்போது இணையத்தில் வெளியானது. இதனால் மன உளச்சல் அடைந்த நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில் நடிகை சோனா ஆபிரகாம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், எனக்கு 14 வயதின் போது அந்த காட்சி எடுக்கப்பட்டது. அப்போது அது என்ன என்பது கூட எனக்கு தெரியாது.
படத்தின் இயக்குநர் சதீஷ் அனந்தரி வற்புறுத்தி நடிக்க வேண்டும் என்றார். அதனால் தவிர்க்க முடியாமல் நடித்தேன். ஆனால், இரண்டு வருடத்திற்கு பின்பு படத்தில் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் எல்லாம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இது தொடர்பாக கேரள முதல்வர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.