ஈரேட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் சாலை விபத்தில் பலி..!

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். டான்ஸ்மாஸ்டரான இவர் ராகுல்டிக்கி என்ற யூட்யூப்சேனலை நடத்திவந்தார். ஏழை எளியோருக்கு எதாவது உதவிகள் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு வந்தார்.
சம்பவத்தன்று மனைவியை அழைத்து வருவதற்காக, மாமியார் வீட்டிற்கு ராகுல் டிக்கி பைக்கில் வேகமாக சென்ற போது, கவுந்தபாடி அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதாகவும், தலைக்கவசம் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் அடைந்து பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.