1. Home
  2. தமிழ்நாடு

பிரபல வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தா மருத்துவமனையில் அனுமதி..!

1

கிராமத்து சமையலை வித்தியாசமாக வழங்கி சமூக ஊடகங்களில் மக்களை கவர்ந்தவர்கள் தி வில்லேஜ் குக்கிங் எனும் யூடியூப் சேனல்.

புதுக்கோட்டை மாவட்டம் சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அய்யனார், முத்துமாணிக்கம், முருகேசன் மற்றும் தமிழ்செல்வனுடன் முதியவர் பெரியதம்பியின் சமையல் அனுபவத்தோடு தொடங்கியது இந்த குழுவின் பயணம். 2018 ஏப்ரல் மாதத்துக்கு முன்புவரை டெம்ப்போ ஓட்டுனர், டிராவல்ஸ் நடத்துனர், கல்லூரி மாணவர், வெப்சைட் நடத்துனர் என, தங்களுக்கு தெரிந்த துறையில் உழைப்பை கொட்டினாலும், போதிய வருமானம் கிடைக்கவில்லையே என யோசித்தவர்களுக்கு கிடைத்த ஐடியாதான் யூடியூப் சேனல் தொடங்குவது.

மிகக் குறைந்த செலவில் சமையல் வீடியோ தயாரிப்பது எப்படி என ஆலோசித்து, கிராமத்தில் கிடைத்த மீன், நண்டு, நத்தை உள்ளிட்டவற்றை சமைத்து, வீடியோ பதிவேற்றி வந்தனர். தற்போது ஒரு வீடியோவுக்கு, 3 லட்சம் ரூபாய் வரை செலவிடும் அளவுக்கு உயர்ந்துள்ள வில்லேஜ் குக்கிங் சேனல் இளைஞர்கள்.

இந்த சேனல் முக்கியமான நபர் என்றால் அதில் வரும் தாத்தா பெரிய தம்பி தான். வயதான காலத்திலும் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு இவர் செய்யும் சமையல் அனைவரையும் வியக்க வைக்கும்.இதற்கிடையே இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக குக்கிங் சேனலின் அட்மின் சுப்பிரமணியன் வேலுச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில், "தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி! Grandpa is admitted to the Hospital due to Heart Disease. He is in good condition now. Thank you for your love and Support!" என்று பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like