1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் பலி..!

Q

தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்தார். இன்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கர்நாடகாவின் மண்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. அத்துடன் ஐதராபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று காரின் வலது புறத்தில் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like