1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் சிக்கினார்..!

1

பிரபல சின்னத்திரை நடிகை திவ்யங்கா திரிபாதி சாலை விபத்தில் சிக்கியுள்ளார். ஹிந்தியில் 'யே ஹை மொஹப்பதீன்' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.  இம்மாத தொடக்கத்தில் தசைநார் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  அவரின் இந்த உடல்நிலைக் குறைவு அவரின் ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் பலத்த காயமடைந்த அவருக்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கை எலும்புகளில் பலமாக அடிபட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாலிவுட் சின்னத்திரை உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

Trending News

Latest News

You May Like