13 வருட காதலியை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகர்..!
விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல். இந்த தொடரில் திரவியம் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஈரமான ரோஜாவே தொடருக்கு பிறகு இந்த தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். இவர் பாக்யலட்சுமி தொடரில் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் மூத்த சகோதரர் ஆவார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலின் தம்பியாக அவினாஷ் நடித்துள்ளார். பின்னர் தொடரில் இருந்து விலகினார்.
துபாயை சேர்ந்த இவர் தமிழில் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளராக வெற்றி பெற்றார். இந்நிலையில் 13 வருட காதலியை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தெரசா மரியா ஜோசப்புடனான தனது காதல் வாழ்க்கையை திருமண வாழ்க்கையாக மாற்றியுள்ளார்.
எளிமையான கிறிஸ்தவ திருமணத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்களை நடிகர் அவினாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து நடிகர் அவினாஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், "13 வருட போராட்டத்திற்கு பிறகு திருமணத்தை முடித்தோம். 13 வருட நட்பும், காதலும் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. "கனவு நனவான தருணம் இது" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். புதுமணத் தம்பதிகளுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.