பிரபல சின்னத்திரை நடிகர் கவலைக்கிடம்..!
டான்ஸர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் நேத்ரன்.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் பரிச்சயமானவர் இவருடைய காதல் மனைவி தீபா. இவரும் சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நேத்ரன் - தீபாவுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அபிநயா `கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்நிலையில் அபிநயா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "எனக்கு இதை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. கொஞ்ச வாரமாகவே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்காங்க. அவருக்கு கேன்சர் பாசிட்டிவ். ஆனால், சர்ஜரி பண்ணிட்டாங்க. கல்லீரல் டேமேஜ் ஆகியிருக்குன்னு மறுபடி ஐசியூவில் வச்சிருக்காங்க. நான் ரொம்ப நாளா இதை உங்ககிட்ட ஷேர் பண்றதுக்கு தயங்கிட்டே இருந்தேன். நீங்க எல்லாரும் அப்பாவுக்காக ப்ரே பண்ணிக்கிட்டீங்கன்னா அந்த பாசிட்டிவிட்டியினால அவங்க சீக்கிரம் சரியாகி வருவாங்கன்னு நான் நம்புறேன். அப்பா சீக்கிரம் சரியாகி வரணும்! நீங்க எல்லாரும் ப்ரே பண்ணுங்க! நன்றி' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.