1. Home
  2. தமிழ்நாடு

பிரபல தமிழ் சினிமா பிரபலம் கடையம் ராஜூ காலமானார்..!!

Q

நடிகர்கள் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் காலத்தில் இருந்தே சினிமாவில் மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றியவர் கடையம் ராஜூ. தென்காசியைச் சேர்ந்த இவர் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வந்தவர்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறார். எம்.பி. திருநாவுக்கரசருக்கு மேனேஜராகவும் பணிபுரிந்தார். 
இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடையம் ராஜூ, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like