1. Home
  2. தமிழ்நாடு

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை..!

1

மலையாள தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தவர் நடிகை ரெஞ்சுஷா மேனன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அற்புததீவு, பாம்பே மார்ச், காரியஸ்தன், ஒன் வே டிக்கெட், சிட்டி ஆப் கார்ட் போன்ற மலையாள படங்களில் அவர் துணை நடிகை வேடங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சின்ன திரையில் ஏராளமான சீரியல்களில் அவர் நடித்து வந்தார். மேலும் சில சீரியல்களை அவர் தயாரித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 வயதான ரெஞ்சுஷா மேனன் சீரியல்கள் தயாரித்து வந்ததில், பண நெருக்கடியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like