பிரபல பாடகர் பூபிந்தர் சிங் காலமானார்..!!
பிரபல பாடகரான பூபிந்தர் சிங் காலமானார்..அவருக்கு வயது 82.
பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Anguished by the passing away of Shri Bhupinder Singh Ji, who has given memorable songs for decades. His works struck a chord with several people. In this sad hour, my thoughts are with his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) July 18, 2022
பூபிந்தர் சிங் ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இளையராஜாவின் இசையில் மகேந்திரன் இயக்கத்தில் 1981ம் ஆண்டு வெளிவந்த நண்டு படத்தில் இடம் பெற்ற கைசே கஹுன் என்ற பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பூபிந்தர் சிங் பாடியுள்ளார்.
நண்டு படத்தில் இடம் பெற்ற அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா, மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே... ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். இப்போதும் இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றவை. மொழி புரியவில்லை என்றாலும் பூபிந்தர், ஜானகியின் குரலுக்காகவும், இசைக்காகவும் ரசிக்கப்படும் ஒரு பாடல்.
அமிரிட்சரில் பிறந்த பூபிந்தர் டில்லியில் வளர்ந்தவர். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை ஆரம்பித்து தூர்தர்ஷனில் தொடர்ந்தவர். பங்களாதேஷைச் சேர்ந்த மிதாலி முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 80களின் மத்தியில் சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்டு மேடைகளில் பாடி வந்தார்