பிரபல வானொலி தொகுப்பாளர் காலமானார்..!
"பினாகா கீத் மாலா" நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
இந்த தகவலை அவரது மகன் ரஜில் சயானி தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை இரவு அமீன் சயானிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
"எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் இரவு 7:00 மணியளவில் மாரடைப்பால் அவர் காலமானார்" என்று ரஜில் சயானி பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிடம் கூறிள்ளார்.
1932ல் பிறந்த அமீன் அகில இந்திய வானொலியில் 6 தசாப்தங்களாக பணியாற்றினார். கீதமாலா நிகழ்ச்சி மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற அவர், தனது வாழ்க்கையில் 54,000க்கும் மேற்பட்ட வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ள இவரது மறைவுக்கு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.