சேலத்தை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்..!

சேலம் ரவுடி ஜான் தனது மனைவியுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் ஜாமினில் வந்து கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார்.
இவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவி கண் முன்னே 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற போது ரவுடி ஜானை காரில் துரத்திய கூட்டம், விபத்தை ஏற்படுத்தி வெட்டி சாய்த்தது. பட்டப்பகலில் கொலை நடந்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களில் 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இவர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.