பிரபல இயக்குநர் பலாத்கார வழக்கில் கைது! இவர் மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தந்தவர்..!

மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்து வந்தவர் மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த 16 வயதான இளம் பெண். இவரது தோற்றம் காண்போரை கவர்ந்தது. யூடியூப்பில் இவரது வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மோனாலிசா போஸ்லே என அழைக்கப்படும் இந்த சிறுமி, பொதுமக்களின் தொந்தரவு மற்றும் செல்ஃபி வெறியால் கும்பமேளாவில் இருந்து கிளம்பி தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
வாழ்வாதாரம் இழந்த மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு தருவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்பவர் உறுதியளித்து அவரை நேரில் சென்றும் பார்த்தார்.
பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். டைரீஸ் ஆஃப் மணிப்பூர் என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு காதயநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் மனோஜ் மிஸ்ரா (45 வயது) பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.
படத்தில் வாய்ப்புகள் தருவதாக ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.