கொரோனா தடுப்பு கவச உடை அணிந்து விமானத்தில் பறந்த பிரபல நடிகை!

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமான பயணம் மேற்கொண்டுள்ளார். வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் தகுந்த பாதுகாப்புடன் அவர் விமான பயணம் மேற்கொண்ட அனுபவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட் மட்டுமல்லாமல் உடல் முழுவதையும் பாதுகாக்கும் விதமான கவச உடையில் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார்.
newstm.in