1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகை ஹன்சிகா வீட்டில் அதிர்ச்சி மரணம்..!

1

ஹன்சிகா மோத்வானி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுக ஹான்சிகா, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார்.

இதன் பின் உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதையடுத்து, சிம்பு, சித்தார்த், ஜெயம்ரவி உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் முன் தனது நீண்ட நாள் நண்பர், தொழில் அதிபரானசோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஹன்சிகா வீட்டில் திடீர் மரணம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் ஒன்று திடீரென மரணித்துள்ளது. அது குறித்த பதிவில், அன்பான புருஸோ…. இதுவே கடினமான Goodbye. நாங்கள் உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம், நீ என் சிறந்த மகன், என் லில் மூஸி, உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அமைதியாய் ஓய்வெடு டெடி மற்றும் மர்பி இருவரும் தங்களின் பெரிய சகோதரனை ரொம்ப மிஸ் பண்றாங்க. லவ் யூ என மிகுந்த மனவேதனையோடு உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். ஹன்சிகாவின் இந்த இழப்பிற்கு பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like