பூவ பூவ பூவ பூவ பூவே... வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளிர் காலத்தை வரவேற்கும் விதமாக ஹார்னமென்டல் செர்ரி மலர் கொடைக்கானலில் உள்ள பிரையன்ட் பூங்காவில் பூத்து குலுங்குகின்றது. இந்த பூவானது மரத்தில் பூக்கக்கூடிய அரியவகை பூ ஆகும்.
ஆண்டு முழுவதும் இலைகளை மட்டும் கொண்டிருக்கும் இந்த மரம், டிசம்பர் மாதத்தில் மலர் மொட்டுக்கள் உருவாகி மரத்தின் அனைத்து இலைகளையும் உதிர்க்கத்துவங்கி, அனைத்து மொட்டுக்களும் ஒரே நேரத்தில் மலர்ந்து மரம் முழுவதும் ரோஸ் நிறமாக மாறி காண்பவர் கண்ணை கவரும் வண்ணத்தில் காட்சியளித்து வருகிறது.
#WATCH | வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்!#SunNews | #Kodaikanal pic.twitter.com/LD8QVkWyWm
— Sun News (@sunnewstamil) February 14, 2024