1. Home
  2. தமிழ்நாடு

பூந்தமல்லி மருத்துவர் தம்பதியின் குடும்பத்துக்கு 1 கோடியே 60 லட்சம் இழப்பீடு..!

1

சென்னை, பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சோ்ந்த திருஞானசெல்வம் நுகர்வோர் குறைதீ்ர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், மருத்துவரான தனது மகள் விபூஷ்ணியா மற்றும் மருத்துவரான லோகேஸ்வரன் ஆகிய இருவருக்கும் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த பின்னர் மருத்துவர் தம்பதியினர் தேனிலவு கொண்டாட பாலி தீவு மற்றும் இந்தோனேஷியாவுக்கு செல்ல ஜி.டி ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அந்த நிறுவனமும், விமான டிக்கெட், தங்குமிடம், உணவு மற்றும் சுற்றுலா என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுமண தம்பதி திட்டமிட்டபடி இந்தோனேஷியா சென்றனர். அங்கே கடல் பகுதியில் மோட்டாா் போா்ட்டில் சென்று போட்டோ ஷூட் நடத்திய போது, எதிர்பாராத விதமாக திடீரென இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சுற்றுலாவுக்கு ஏற்பாடுகள் செய்த ஜி.டி ஹாலிடேஸ் நிறுவனத்தின் வழிகாட்டு நபரின் (Guide) தவறான வழிகாட்டுதலினால் விபூஷ்ணியா மற்றும் மருமகன் லோகேஸ்வரன் இருவரும் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டனர். ஏற்கனவே பல விபத்துக்கள் அந்த இடத்தில் நடந்து இருந்தும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் வழிகாட்டு நபரால் அஜாக்கிரதை மற்றும் சேவை குறைப்பாட்டினாலும் இருவரும் உயிரிழந்தனர்.

எனவே, ஜி.டி ஹாலிடேஸ் சுற்றுலா நிறுவனத்தின் சேவையின்மையை பரிசீலனை செய்து 1.50 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகவும், மேலும் மகள், மருமகன் ஆகிய இருவரின் மரணத்தினால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வழங்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஜி.டி ஹாலிடேஸ் சுற்றுலா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், '' தம்பதிகளின் மரணத்தால் புகார்தாரர் அனுபவிக்கும் கஷ்டங்கள் அனைத்தும் காப்பீடு எடுக்கத் தவறியதாலும், எச்சரிக்கையைப் பின்பற்றத் தவறியதும் தான் காரணம்'' என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடே இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்பதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், திருஞானசெல்வத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகவும் ஜி.டி ஹாலிடேஸ் நிறுவனம் வழங்க வேண்டும்'' என உத்தரவிட்டது.


 

Trending News

Latest News

You May Like