கூலிப்படையை செட் பண்ணி புருஷனை போட்டுத்தள்ளிய பொண்டாட்டி!

50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை வைத்து மனைவி ஒருவர் தனது கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஜெய்தீப் – தேவிகா தம்பதி வசித்து வந்தனர். ஜெய்தீப் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தேவிகா கடும் மன உளைச்சலில் இருந்தார்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து கூலிப்படையை சேர்ந்த இருவருக்கு 50,000 ரூபாய் பணம் கொடுத்து கணவரை கொலை செய்ய சொன்னார்.
அவர் போட்டுக் கொடுத்த பிளான்படி ஜெய்தீப் வழக்கம்போல குடித்துவிட்டு சாலையில் வந்துகொண்டிருந்த போது, கூலிப்படையை சேர்ந்த இருவரும் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் நேரில் வந்து அனைவரின் செல்போன் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் தேவிகாவே கூலிப்படை மூலம் கணவரை தீர்த்து கட்டிய விவரத்தை தெரிந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் தேவிகாவை கைது செய்தனர்.
newstm.in