1. Home
  2. தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு விலக்கு..?

1

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும், மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம், 30 நாட்களுக்கு பிறகு கீழமை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதி சதீஸ் சந்திர சர்மா முன்பு இன்று (ஜன.12) பிற்பகல் 02.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஏன் இத்தனை மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி உள்ளீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like