1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பொன்முடி பகிரங்க மன்னிப்பு கோரினார்..!

Q

அமைச்சர் பொன்முடி  பெண்கள் குறித்து இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படியா பேசுவது என விமர்சனங்கள் எழுந்தன. பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக பேசி சர்ச்சையில் ஏற்கெனவே சிக்கிய பொன்முடிக்கு இது மேலும் சிக்கலை உருவாக்கியது. அமைச்சரின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

 

இதற்கிடையே, சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்.

 

நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் 

 

Trending News

Latest News

You May Like