1. Home
  2. தமிழ்நாடு

ஆண் குழந்தைகளுக்கான ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’... போஸ்ட் ஆபிஸில் சேருவது எப்படி ?

1

பெண் குழந்தை பிறந்தாலோ அல்லது நமது உறவினருக்கு பெண் குழந்தை பிறந்தாலோ, உடனடியாக ‘போஸ்ட் ஆபிஸ் போகணும்.. : ‘செல்வமகள்’ சேமிப்புத் திட்டம்.

என்று கூறுவார்கள். அதேபோல், இனி ஆண் குழந்தை பிறந்தாலும், போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்கலாம்.

இதன்படி, ஒரு ஆண் குழந்தையின் பெயரில் நாம் குறிப்பிட்ட ஒரு தொகையை 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.

ஒரு ஆண் குழந்தை பிறந்த உடன், இந்த சேமிப்பு கணக்கை அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று, அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று துவங்கலாம். கணக்கு தொடங்கும்போது 500 ரூபாய் செலுத்தி, பாஸ்புக் உள்ளிட்ட ஆவணங்களையும் உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

பொன்மகன் சேமிப்பு திட்டம் முதிர்வு தொகை: ஒரு ஆண் குழந்தைக்கு 18 வயது நிரம்பும் வரை, அக்குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் இணைப்புக் கணக்கு (Joint Account) தொடங்கலாம். அந்த நேரத்தில் குழந்தை 10 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு 12 முறை தவணைத் தொகை செலுத்த வேண்டும். 500 ரூபாய் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை நாம் செலுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒருவர் மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வட்டி 7.6 சதவீதம் என வைத்துக் கொள்ளலாம்.

இதன் அடிப்படையில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 441 ரூபாய் முதலீட்டு வட்டியுடன் சேர்த்து, மொத்த முதிர்வு தொகையாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 446 ரூபாய் கிடைக்கும். ஆனால், வட்டி விகிதம் என்பது மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

பொன்மகன் சேமிப்பு திட்ட தொகையை இடையில் எடுக்கலாமா? பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இருப்பினும்,  5 ஆண்டுகள் கூடுதலாக தொகுப்பு ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளலாம். இதனிடையே, கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, தேவைப்படும் தொகையை இதில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

இதன் பிறகு, மீதம் உள்ள 10 ஆண்டுகளுக்கான தொகையை மட்டும் செலுத்தினாலே போதும். 5 ஆண்டுகள் முடிவடைந்தபோது எடுத்த தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், கணக்கு துவங்கி 5 ஆண்டுகள் ஆனதும், விருப்பம் இருந்தால் கணக்கை முழுவதுமாக முடித்துக் கொள்ளவும் முடியும்.

பொன்மகன் சேமிப்பு திட்டம் கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள்:

1. உங்கள் ஆண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

2. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சரியான முகவரி

3. ஆதார் அட்டை

4. பான் கார்டு

5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

6. கணக்கு துவங்க ரூ.500

 

Trending News

Latest News

You May Like