இன்று முதல் பொங்கல் டோக்கன் விநியோகம்..! டோக்கன் வாங்குவது எப்படி?
பொங்கல் பண்டிகை தொடங்க உள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுதொகுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பரிசுதொகுப்புகளை பெறுவதற்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில் இதற்கான பணியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பரிசுதொகுப்பில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.இந்த முறை வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் இன்று (ஜனவரி 3) தொடங்குகிறது. இந்த டோக்கன் வழங்கும் பணியானது பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் அத்துடன் ரேஷன் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த டோக்கன்களை வைத்து அவற்றில் குறிப்பிட்டுள்ள தேதி நேரம் வைத்து சென்று பொருட்களை வாங்கலாம். எனவே, இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களை அவரவர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி சென்று ரேஷன் கடைகளில் வாங்கிகொள்ளலாம். இந்த ஆண்டு 2.20 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசுக்கு 249.76 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.