இன்று முதல் பொங்கல் தொகுப்பு.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை இடம் பெற்றுள்ளது. இன்று முதல் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வரை பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது.
2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது இதுவரை 95 சதவீதம் பேருக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தை இன்று (ஜனவரி 9) சைதாப்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது