1. Home
  2. தமிழ்நாடு

சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவுத் தொடக்கம்..!!

Q

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவ.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2,533 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், சுமார் 5.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 958 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் மாநில காவல்துறையினருடன் இணைந்து, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 7- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like