1. Home
  2. தமிழ்நாடு

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: EPS பரபரப்பு பேட்டி..!

Q

பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அதிமுக எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அஇஅதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி இன்று கிடைக்கப்பெற்றுள்ளது.திமுக-வைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்கும் அற்ப புத்தி எங்களுக்கு இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றினோம்.
-பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்களை வெளியிட்டது யார் என்று சொல்லுமா? இது பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டும் செயல் இல்லையா? அண்ணா பல்கலை. வழக்கில் யாரைக் காப்பாற்ற எப்.ஐ.ஆர். லீக் செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு?எப்.ஐ.ஆர். அடிப்படையில் #யார்_அந்த_சார்? என்ற நியாயத்தின் கேள்வியைக் கேட்டோம். அந்த கேள்விக்கான விடையைக் கண்டறிய, நீதி கிடைக்க சிபிஐ விசாரணை கோரினோம். ஆனால், அதனை முழு மூச்சாக இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு எதிர்த்ததே, ஏன்? யாரைக் காப்பாற்ற துடிக்கிறது திமுக?
-கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்றது ஸ்டாலின் மாடல் திமுக அரசு தானே? ஏன் சென்றது? -நீதி கிடைப்பதில் என்ன பயம் இவர்களுக்கு?
தெளிவாக சொல்கிறோம்- எங்கள் ஆட்சியில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு, எங்களால் அமைக்கப்பட்ட சிபிஐ விசாரணையில் குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டு , இன்று கடுமையான தண்டனைகளை அவர்கள் பெற்றிட காரணமாக அமைந்தது அதிமுக அரசு"ஞானசேகரன் திமுக கொத்தடிமை அல்ல- அனுதாபி மட்டுமே" என்று மு.க.ஸ்டாலின் போன்று நாங்கள் உருட்டவும் இல்லை; உங்களை போன்று எந்த சார்-ஐ காப்பாற்ற முயற்சிக்கவும் இல்லை! திமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும், இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும்! இது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இனியும் நிரூபிக்கப்படும்!
2026-ல் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி அமைந்ததும் #யார்_அந்த_சார் என்ற கேள்விக்க்கான பதிலும், உரிய நீதியும் நிச்சயம் கிடைக்கும்! அன்று திமுக தலைகுனிந்து நிற்கும்! இது உறுதி. என பதிவிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like