1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் பரபரப்பு..! திடீரென தென்காசி தொகுதி வேட்பாளரை அறிவித்தார் சீமான்..!

1

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக சீமான் வருகை தந்துள்ளார். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

இதையடுத்து சுரண்டை அருகே உள்ள மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் பாண்டியன் என்பவர் போட்டியிடுவார் என்று சீமான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இவர் கடந்த 2023ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினரான இணைந்தார். தற்போது நாம் தமிழர் கட்சியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like