1. Home
  2. தமிழ்நாடு

அரசியலில் பரபரப்பு..! தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..!

Q

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன.,5ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை அமைச்சர் பெரியசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல, தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக உள்ளது.

தனி அதிகாரி நியமன மசோதாவுக்கு கூட்டணி கட்சியான காங்கிரஸே எதிர்ப்பு தெரிவித்திருப்பது தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like