1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதியில் போட்டோ ஷூட் நடத்திய அரசியல் பிரமுகர்! கடுப்பான பக்தர்கள்..!

1

ஆந்திராவை சேர்ந்தவர் வம்சி நாத் ரெட்டி. தொழிலதிபர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்து வெளியே வந்த வம்சி நாத் ரெட்டி கோவில் முன்பாக 4 போட்டோகிராபர்களை வைத்துப் போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார். போட்டோகிராபர்கள் வம்சிநாத் ரெட்டியை பல கோணங்களில் வீடியோ, படம் எடுத்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதனைக் கண்டு முகம் சுழித்தனர். இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் செய்தனர்.

தேவஸ்தான அதிகாரிகள் போட்டோ ஷூட் நடத்தியவர்கள்மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்ட ஒரு சில பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் வம்சி நாத்ரெட்டிக்கு எதிராகக் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like