அரசியல் பரபரப்பு.. மம்தாவை சந்திக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..!
அரசியல் பரபரப்பு.. மம்தாவை சந்திக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி..!

பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை டில்லியில் இன்று மாலை சந்திக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி பாஜகவின் செயற்குழுவில் இருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டார். மேலும், மோடி அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், பல்வேறு தருணங்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில், டில்லியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் இல்லத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு பாஜக நிர்வாகிகள் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அரசியல் ரீதியாக பல்வேறு விவகாரங்கள் குறித்து சுப்பிரமணியன் சுவாமி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் என்ன நடக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.