அரசியல் பரபரப்பு..! உடைகிறதா புதுச்சேரி பாஜக?
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து அமைச்சர் இலாகாக்கள் ஒதுக்குவதில் சிக்கல், தொகுதி நிதி ஒதுக்குவதில்லை என குற்றச்சாட்டு, வாரிய தலைவர் பதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முரண்பாடுகளுடன் இந்த கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் படுதோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு கூட்டணி கட்சியின் முதல்வராக இருக்கும் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தான் என கடும் விமர்சனங்களை பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களும் பாஜக ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கி, டெல்லி மேலிடம் வரை பிரச்சனைகளை முன்வைத்தனர்.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும், அமைச்சரவையை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போர்க்கொடி தூக்கி இருந்த நிலையில், கட்சி தலைமை எந்த பதிலும் அளிக்காமல் கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும் என பகிரங்கமாக அறிவித்தது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைபாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.
தற்போது லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் புதுச்சேரியில் அரசியல் பிரவேசத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு அச்சாரம் போட தயாராகி வருகிறது. பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களும், சுயேச்சை ஆதரவு எம்எல்ஏக்களும் தீவிரமாக அதற்கான வேலைகளை தொடங்கி வருகின்றனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து பாஜக இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 2026-ல் பாஜக தனித்து பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், பாஜகவில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எடுத்துள்ள இந்த விவகாரத்தை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஆளும் அரசாக இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் படு தோல்வி அடைந்த பாஜக உடைய அரசியல் பிரவேசம் புதுச்சேரியில் இத்துடன் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கருத்தில் கொண்டு பாஜகவில் இருக்கும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி மிகப்பெரிய பண பலம் இருக்கும் நபரை புதுச்சேரி இறக்கி அரசியல் பிரவேசத்தை தொடங்க தீவிரம் காட்டி வருவதால் புதுச்சேரி ஒட்டுமொத்த அரசியலும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கடந்த சில தினங்களாக லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவரது அலுவலகங்களில் இந்தியா முழுவதும் உள்ள இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்திய நிலையில், நேற்று முன்தினம் புதுச்சேரியில் அவரது மகனின் அரசியல் பிரவேசம் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் புயலை கிளப்பியுள்ளது.