பிரபல அரசியல் கட்சி தலைவரின் மகன் கைது..!
ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார பத்திரிக்கையை (நக்கீரன்) கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வாரப் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் நாக்கை அறுத்து விடுவதாக கூறி பேசி இருந்தார்.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஓம்கார் பாலாஜியை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கிரிமினல் குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ், ஓம்கார் பாலாஜி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.