1. Home
  2. தமிழ்நாடு

சங்கர நேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

1

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.[9] சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்த நிலையில், பத்ரிநாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பத்ரிநாத் 1996-ல் இந்தியக் குடியரசில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார். பத்மஸ்ரீ  மற்றும் மரு. பி. சி. ராய் விருது உட்படப் பல விருதுகளையும் பெற்றார்.

இந்நிலையில்  சங்கர் நேத்ராலயா நிறுவனர் மருத்துவமனையான டாக்டர் பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.அவரது  மறைவுக்காக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும் புகழ்பெற்ற கண் மருத்துவருமான திரு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் மறைந்தார் என்றறிந்து வேதனையடைந்தேன்.அமெரிக்காவில் உயர்படிப்புகளை முடித்து, இந்தியாவில் குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற சேவை நோக்குடன் திரு. பத்ரிநாத் அவர்கள் தொடங்கிய சங்கர நேத்ராலயா மருத்துவமனை பல்கிப் பெருகி இன்று நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது. இத்தகைய சேவைக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 'பத்மபூஷன்' விருதினையும் மருத்துவர் பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர நேத்ராலயா மூலம் திரு. பத்ரிநாத் அவர்கள் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி அறிந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் நானி பல்கிவாலா அவர்கள் பெரும் நிதியுதவியை அந்த மருத்துவமனைக்கு அளித்ததுடன், பின்னர் தனது சொத்துகள் அனைத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கு எழுதி வைத்தார் என்பதன் மூலம் இத்துறையில் திரு. பத்ரிநாத் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை அறியலாம். எண்ணற்ற மக்களுக்குக் கண்ணொளி பாய்ச்சிய பத்ரிநாத் அவர்களது மறைவு மருத்துவத்துறைக்கே பேரிழப்பு.

திரு. எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனரும், புகழ்பெற்ற கண் மருத்துவருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். 

கண் மருத்துவராக அமெரிக்காவில் கொடிகட்டி பறந்தாலும், பாரத நாட்டு மக்களுக்கு குறைந்த செலவில் கண் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக, சென்னையில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையைத் தொடங்கினார்.

ஏழைகளுக்கும் உயரிய கண் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக நாடெங்கும் நல் உள்ளங்களிடம் நன்கொடை பெற்று, நவீன கருவிகளை சங்கர நேத்ராலயாவில் நிறுவினர். அவரது தொண்டு உள்ளத்தால், மருத்துவ அறிவால் லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி பாய்ச்சினார். திரு. பத்ரிநாத்தின் மறைவு மருத்துவ உலகிற்கே பேரிழப்பு. 

அவரது மறைவில் வாடும் குடும்பத்தினர், சங்கர நேத்ராலயா மருத்துவர்கள், ஊழியர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன " என்று குறிப்பிட்டுள்ளார். 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர்,  டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். 

கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, பொருளாதார ரீதியாக நலிவடைந்த ஏழை எளிய மக்களுக்கும் தரமான கண் மருத்துவ சிகிச்சை, இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்தவர். கண் மருத்துவக் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். உயரிய பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.

டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைவு, நம் சமூகத்துக்கும், மருத்துவ உலகுக்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்,  தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என்று குறிப்பிட்டுள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள்.

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள்.

அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள்.

அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

செங்கமேடு சீனிவாச பத்ரிநாத், சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராவார். பத்ரிநாத், பரோபகாரிகள் குழுவுடன் சேர்ந்து, 1978ஆம் ஆண்டில் சென்னையில் சங்கர நேத்ராலயா எனும் மருத்துவ மற்றும் பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவினார். இது ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். இலாப நோக்கற்ற கண் மருத்துவமனை மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஒரு பிரிவாகும். சராசரியாக, 1200 நோயாளிகள் மருத்துவமனை நாள்தோறும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். 

ஒவ்வொரு நாளும் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.[9] சங்கர நேத்ராலயா 1978ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு பெற்றவர்களுக்கு விழியக-விழித்திரை அறுவை சிகிச்சை, கருவிழிப்படலம், ஓக்குலோபிளாஸ்டி, கண்விழி விறைப்பு, குழற்படலம் மற்றும் பொதுவான கண் மருத்துவம் ஆகியவற்றில் நிதியுதவித் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்த நிலையில், பத்ரிநாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

இந்த நிலையில், மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொலைநோக்கு பார்வையாளரும், கண் மருத்துவத்தில் நிபுணருமான, சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர். எஸ்.எஸ்.பத்ரிநாத் ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. கண் சிகிச்சையில் அவர் ஆற்றிய பங்களிப்பும், சமூகத்திற்கான அவரது இடைவிடாத சேவையும் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது பணி தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like