அரசியல் பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!

புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் முதுகுடியைச் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ராஜாலிங்கத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதனையடுத்து ராஜாலிங்கத்தை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் முதுகுடி அருகே சங்கரன்கோவில் செல்லும் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜாலிங்கத்துக்கும் தேசியாபுரம் பகுதியைச் சேர்ந்த, உயிரிழந்த தங்கவேலு உறவினர்களுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in