அரசியல் ஆசை.. மக்களிடம் பிரபலமாக 2 வயது மகளை அடித்து கொலை செய்த தந்தை !

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நிங்கப்பா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 35 வயதான இவர் அப்பகுதியில் பிரபலமானவராக உள்ளார். இதனால் அரசியலில் பெரிய ஆளாக உருவாக வேண்டுமென்ற ஆர்வம் அவரிடம் இருந்தது.
;ஏற்கனவே திருமணமாகி மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தந்தையான நிங்கப்பாவிற்கு பின்னர் சசிகலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் கள்ளக்காதல் அவப்பெயரை மாற்ற அப்பெண்ணை இரண்டாவதாக மனம் முடித்துள்ளார் நிங்கப்பா.
இருப்பினும் இரண்டாவது திருமணத்தை ஊருக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தார். நிங்கப்பா மற்றும் சசிகலாவுக்கு இரண்டு வயதில் சிரிஷா என்ற பெண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. இந்நிலையில் தங்களது திருமணத்தை ஊர் அறிய சொல்லும்படி நிங்கப்பாவை வற்புறுத்தி வந்துள்ளார் சசிகலா.
பஞ்சாயத்து தேர்தலுக்காக தயாராகி வந்த நிங்கப்பா குழந்தை சிரிஷாவை தன்னிடம் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும்படி சசிகலாவிடம் சொல்லியுள்ளார். அவரும் அதன்படியே செய்துள்ளார். ஆனால் நாளடைவில் அச்சிறுமி குறித்து வதந்தி பரவியது.
இதனால் இரண்டாவது மனைவியின் குழந்தை சிரிஷா முட்டிக்காட்டையாக இருப்பார் அஞ்சி குழந்தை சிரிஷாவை கொடூரமாக அடித்து, குழி தோண்டி புதைத்து கொன்றுள்ளார். இனால் தனது மகளை காணவில்லை எனக்கூறி சசிகலா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் நிங்கப்பா தான் மகளை கொலை செய்தார் என அவர் போலீசாரிடம் கூறி அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது மகளை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in