1. Home
  2. தமிழ்நாடு

கைது செய்து இழுத்துச்சென்ற போலீசார்.. கைதிக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அதிர்ச்சி !

கைது செய்து இழுத்துச்சென்ற போலீசார்.. கைதிக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அதிர்ச்சி !


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(65). இவர் பொது குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பக்கத்துவீட்டுக்காரர் முருகேசன் என்பவரை தாக்கியுள்ளார்.

இதில், காயமடைந்த முருகேசன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தாக்குதல் குறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்தனர். 

கைது நடவடிக்கையின் போது வழக்கம்போல், அவரை சிறையில் அடைப்பதற்கு முன்பாக ராஜமாணிக்கதிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் ராஜமாணிக்கத்திற்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்தநிலையில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராஜாமணிக்கம் மருத்துவமனையில் இருந்து போலீசார்  கண்காணிப்பை மீறி தப்பியோடிவிட்டார். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பிடித்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைது செய்து இழுத்துச்சென்ற போலீசார்.. கைதிக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்ததால் அதிர்ச்சி !

இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் கொரோனா அச்சத்தில் உள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட முதியவருடன் இருந்த போலீசார், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

newstm.in 

Trending News

Latest News

You May Like