பரோட்டா சூரிக்கு போலீஸார் சம்மன்!

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக புகார் அளித்த நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நிலம் வாங்கித் தருவதாக தயாரிப்பாளரும், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி புகார் அளித்தார்.
இது தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகிய இரண்டுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
சூரியின் இந்த புகார் உண்மையில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார். சூரிதான் தங்களுக்கு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு பணம் தரவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்திருந்தார்.
மேலும் சூரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய விஷ்ணு விஷால், சூரி புகார் அளித்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் சூரிக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில் வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
newstm.in