1. Home
  2. தமிழ்நாடு

“காவல்துறையினர் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” : டிஜிபி அறிவுரை!!

“காவல்துறையினர் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” : டிஜிபி அறிவுரை!!


பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவுடனும் மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என டிஜிபி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு முழுமுடக்கம் ஆகியவை அமலில் இருக்கும்போது, மத்திய, மாநில அரசு, நீதித்துறை, உள்ளாட்சி, வங்கி, போக்குவரத்துத் துறை ஊழியர்களை அடையாள அட்டையை பார்வையிட்டு அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள், பத்திரிகை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அடையாள அட்டையைப் பார்வையிட்டு உடனடியாக அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய விளைபொருள்கள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“காவல்துறையினர் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” : டிஜிபி அறிவுரை!!

முழு முடக்கம் அமலில் இருக்கும் ஜனவரி 9ஆம் தேதி உணவு விநியோகிக்கும், மின்வணிகப் பணியாளர்களை காலை 7 முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கலாம். அரசு நுழைவுத்தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்புக் கடிதத்தைக் காட்டினால் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானம், ரயில் பேருந்து நிலையங்களுக்குச் செல்வோரையும் அங்கிருந்து வருவோரையும் அனுமதிக்க வேண்டும். விவசாயப் பணிக்காக செல்வோர், அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணிமுடிந்து சொந்த ஊர் செல்வோரை அனுமதிக்கலாம். வாகனச் சோதனையின் போது மக்களிடம் கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like