யூடியூப் வீடியோ பார்த்து 2 வங்கிகளில் கொள்ளை… வச்சி செய்த போலீஸ்!

யூடியூப்பில் வங்கிக் கொள்ளை வீடியோக்களை பார்த்து இரண்டு வங்கிகளில் கொள்ளை அடித்த நபரை காவல்துறையினர் இரண்டு வாரங்களில் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் சவுமியாரஞ்சன் ஜெனா (25) கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையான இழப்பை சந்தித்துள்ளார். இழப்பை சரிசெய்ய நினைத்த இவர் இரண்டு வங்களில் ரூ.12 லட்சம் கொள்ளையடித்தார்.
கொள்ளையடித்த பணத்தில் ரூ.60 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்ய சென்ற போது போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கொள்ளையடித்ததாக அவர் கூறியுள்ளார்.
ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொம்மை துப்பாக்கியுடன் வங்கிகளுக்கு சென்று பணியாளர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த 2 வங்கிகளிலும் அவர் கடன் பெற்றவர்.
கொள்ளையடித்த பணத்தில் ஒரு சிறிய தொகையை செலுத்தினால் சந்தேகம் வராது என்று அவர் பணத்தை டெபாசிட் செய்ய வந்துள்ளார். அவரை கையும் களவுமாக பிடித்த போலீஸார் ரூ.10 லட்சம் பணம், வாகனம், கொள்ளையடிக்க பயன்படுத்திய பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
newstm.in