எஸ்பிபி உடலுக்கு காவல்துறை மரியாதை.. ஏற்பாடுகள் தீவிரம் !

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, சென்னை சூளைமேட்டில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார்.
அங்கு 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மதியம் 1.04 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அவரது மகன் எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நுங்கம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்து.
பின்னர் பொது மக்களின் கூட்டம் அதிகரித்ததையடுத்து எஸ்.பி.பி.யின் உடல் செங்குன்றத்திற்கு அருகில் உள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லபட்டது. அங்கு இன்று காலை 11 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
newstm.in