1. Home
  2. தமிழ்நாடு

சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.!

Q

அ.தி.மு.க., ஆட்சியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகவும், தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் சொத்துகளை குவித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

 

இவர் தற்போது ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இந் நிலையில், சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

சேவூர் ராமச்சந்திரன் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. எதற்காக இந்த சோதனை, ஏதேனும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்த விவரத்தை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Trending News

Latest News

You May Like