காவல்துறை அறிவிப்பு..! இங்கு கியூ ஆர் கோடு பொருந்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி..!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா பெரும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றிய பிறகுதான் வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றுவார்கள். மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை ஏராமான மக்கள் நேரிலும் கண்டுகளிப்பார்கள். தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்து அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு முதல் பார்க்கிங் வரை அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் முதல் முறையாக பக்தர்களின் நலன் கருதி
QR Code பொருந்திய ஆட்டோக்களுக்கு மட்டுமே தீபத் திருவிழாவிற்கு இயக்க அனுமதி என வழங்கப்படும் என அம்மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து QR Code ஒட்டப்படாத ஆட்டோக்களை இயக்கினால் அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. பல மாநில பக்தர்களுக்கும் திருவண்ணாமலைக்கு வரும் நிலையில் அவர்களின் வசதிக்காக காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்து.
ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பறக்கும் படை என்ற அடிப்படையில், கிரிவலப்பாதையில் 14 பறக்கும் படைகளும், மாடவீதியில் 4 பறக்கும் படைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே 450 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 250 சிசிடிவி கேமராக்கள் உட்பட மொத்தம் 700 சிசிடிவி கேமராக்களை பொருத்தவும் திருவண்ணாமலை காவல்துறை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.