1. Home
  2. தமிழ்நாடு

அண்ணாமலை லஞ்சம் வாங்கிய போலீஸ் - அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

Q

திருச்சியில் நேற்று நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் எல்லாம் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர்

சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இடம்பெற்றவர் அமைச்சர் சேகர்பாபு. இவர் அறநிலையத் துறைக்கு அமைச்சர். இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என்று விமர்சனம் செய்தார். மேலும், மற்ற அமைச்சர்கள் மீதும் உள்ள வழக்குகளை பட்டியலிட்டுப் பேசினார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பாஜக ஆளும் மாநிலங்களை உள்ள அமைச்சர்களை மனதில் வைத்தே குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என அண்ணாமலை கூறியிருக்கிறார் என நினைக்கிறேன். அதேபோல படிக்காதவர்கள் எப்படி பள்ளியைப் பற்றி பேசலாம் என்று சொல்கிறார். காமராஜரை களங்கப்படுத்துவது போலவே இந்த கூற்று உள்ளது” என்று விமர்சனம் செய்தார்

.உங்களை ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் என குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு, “டூப் போலீஸ் அண்ணாமலை லஞ்சம் வாங்கிய பேர்வழி என்று நானும் குற்றம் சாட்டுகிறேன். ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் பேசுவதா? ஆதாரத்தைக் காட்டி குற்றம்சாட்டினால் அதற்கு பதில் சொல்லலாம். போகிற போக்கில் வாரி தூவிவிட்டு போனால் எப்படி முறையாகும். அவரிடம் ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

Trending News

Latest News

You May Like